பாபநாசம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா 64வது பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள்
நடப்பட்டது. இதில் பாபநாசம் யூனியன் தலைவர் கோபிநாதன், துணைத்தலைவர்
ஆனந்தி, தொழிலதிபர் சோழன் நெடுமுடிகிள்ளி ஆகியோர் பங்கேற்று, கோபுராஜபுரம்
கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்
பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் கண்ணன், சிறுபான்மை பிரிவு
செயலாளர் ஜாகிர்உசேன், கோபுராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணி, பாரத்
ஐ.டி.ஐ., நிர்வாகி கிருஷ்ணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
