தேடல்

மருமகளை தாக்கிய மாமனார் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரம் என்.எஸ்.கே.,தெருவை சேர்ந்த பாலமுருகன் மனைவி சரஸ்வதி, 29. மூன்றாண்டுகளுக்கு முன்பு கணவர் துபாய் சென்றுவிட்டார். மாமனார் கிருஷ்ணன், 70, பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மொபைல்போன் காணாமல் போனது தொடர்பாக மாமனார், மருமகளிடையே தகராறு ஏற்பட்டது. இதில், மாமனார் தாக்கியதில் காயமடைந்த சரஸ்வதி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரஸ்வதி புகாரின்படி, ராமநாதபுரம் டவுன் போலீசார் கிருஷ்ணனை கைது செய்தனர்.