தேடல்

மருத்துவர் சமூக நல சங்க கொடியேற்று விழா

வானூர்:மருத்துவர் சமூக நல பாதுகாப்பு சங்க கொடியேற்று விழா நடந்தது.வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடில் நடந்த விழாவிற்கு ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் நிர்வாகிகள் ஆனந்தன், ராஜேந்திரன், சக்திவேல், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.மாநில தலைவர் தண்டபானி சங்க கொடியேற்றி வைத்தார். மாநில செயலாளர் பட்டர்பிரான் கல்வெட்டை திறந்து வைத்தார். பொருளாளர் ராஜூ,தியாகி விஸ்வநாத தாஸ் படத்தை திறந்து வைத்தார்.ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.