தி.மு.க. எம்.பி.ரித்தீஷிடம் மதுரை எஸ்.பி. விசாரணை

மதுரை: தேர்தல் முன்விரோதம் தொடர்பான வழக்கில் தி.மு.க. எம்.பி.யிடம் மதுரை எஸ்.பி. விசாரணை நடத்தினார். ராமநாதபுரம் மாவட்ட போகலூர் ஒன்றிய தி.மு.க. செயலர் கதிரவன் என்பவர் கடந்த 12-ம் தேதி கடத்தப்பட்டார்.

தேர்தல் முன்விரேதாம் காரணமாக இவரை ராமநாதபுரம் தி.மு.க. எம்.பி. ரித்தீஷ் கடத்தியதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எஸ்.பி. அலுவலகம் வந்த ரித்தீஷ் எம்.பி., யிடம் மதுரை எஸ்.பி. ஆஸ்ராகார்க் விசாரணை நடத்தினார்.

முன்னதாக மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணை நடந்தது. ரித்தீஷ் எம்.பி. கூறியதாவது: கதிரவனை யாரே கடத்தியிருக்கிறார்கள். ஆனால் அதில் என்னை தொடர்புபடுத்திய புகார் கொடுத்ததால் என்னிடம் விசாரணை நடந்தது. எஸ்.பி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். அதில் அவர் திருப்தியடைந்ததால் ‌தேவைப்பட்டால் மீண்டும் அழைப்பதாக கூறி அனுப்பினார். இவ்வாறு் அவர் கூறினார்.