தி.மு.க. காங்., கூட்டணி வெற்றி : காங்., தலைவர் ஞானதேசிகன்

திருப்புவனம் : திருப்புவனம் காங்., பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற காங்., மாநில தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்., சங்கரன்கோவில் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுகிறது. தி.மு.க., காங்., கூட்டணி வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு.

கூடங்குளம் விஷயத்தில் சில கூட்டத்தினர் வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து தடை ஏற்படுத்துகின்றனர். எதிர்ப்பாளர் உதயகுமார் குறித்து பேசவேண்டிய அவசியமில்லை. மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் வழங்க கோரிக்கை வைப்போம்.போலீசை விமர்சனம் செய்வதை குறைத்துக் கொள்ளவேண்டும். தகுதியான, திறமையான போலீஸ்காரர்களை செயல்பட வழிவகுத்தால் கொலை, கொள்ளை குறையும் என்றார்.