தேடல்

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

தியாகதுருகம்:வீடு புகுந்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற நபர்களைபோலீசார் தேடி வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த விருகாவூரை சேர்ந்த திருமூர்த்தி, 35. கடந்த 13ம் தேதி அதிகாலை இவரது

வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே மர்ம நபர்கள் புகுந்தனர். அங்குதூங்கிக்கொண்டிருந்த திருமூர்த்தியின் தாய் சீத்தா,60, அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபர்கள் அறுத்தனர். திடுக் கிட்டு

எழுந்த அவர் சத்தம்போட்டதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மர்ம ஆசாமிகளை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.
அதற்குள் வயல்வெளியில் ஓடி மர்ம நபர்கள் தப்பினர்.