திருப்பூர் : திருப்பூர் அவிநாசி ரோட்டில், மகாகவி வித்யாலயா பள்ளியில் இயங்கும் இந்தி பயிற்சி மையத்தில் படித்த 16 மாணவர்கள், இந்தி மொழியில் பட்டம் பெற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய இந்தி பிரசார சாப இருமுறை தேர்வு நடத்துகிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்வில் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 16 பேர், இப்பயிற்சி பள்ளியில் இருந்து பங்கேற்றனர்; கடந்த 18ம் தேதி திருச்சியில் நடந்த விழாவில், 13 வயதுக்குட்பட்ட 16 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.
