தேடல்

மாணவியர் விடுதி அருகே அநாகரீகம் : சாப்ட்வேர் நிறுவன அதிகாரிக்கு நூதன ஆசை

சோழிங்கநல்லூர் : கல்லூரி மாணவியர் விடுதி எதிரே நின்று சுய இன்பம் செய்ததாக சாப்ட்வேர் நிறுவன அதிகாரி ஒருவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. சோழிங்கநல்லூர், ராஜிவ்காந்தி சாலை அருகில் தனியார் கல்லூரி மாணவியர் விடுதி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் அதிகாலை விடுதியின் ஜன்னலில் ஒளி விழுந்தது. திடீரென கண் விழித்த சில மாணவியர்ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, விடுதி அருகில் காருடன் நின்றிருந்த ஒரு நபர் விடுதியை பார்த்தபடி சுய இன்பத்தில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக விடுதி வார்டனிடம் முறையிட்டனர். அந்த நபரை விடுதி காவலர்கள் பிடிக்க முயன்றனர். அந்த நபர் காரை விட்டுவிட்டு தப்பியோடினார்.

சுற்றி வளைப்பு : இதையடுத்து, விடுதி காப்பாளர்கள் உடனடியாக கார் டயரில் காற்றை இறக்கிவிட்டனர். நீண்ட நேரம் காத்திருந்தபோது, வேறு ஒருவர் காரை எடுத்து செல்ல முயன்றார். அவரை சுற்றி வளைத்து பிடித்த விடுதி காப்பாளர்கள் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக புகார் செய்தனர். செம்மஞ்சேரி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். , அந்த நபர்,சூ நான் ஒரு டிரைவர். என் வீட்டருகே உள்ள இன்ஜினியர் ஒருவர் காரை கொண்டு வரும்படி கூறினார். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது, என்றார்.

டிரைவர் தகவல் : டிரைவர் கொடுத்த தகவலின் படி கார் உரிமையாளரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். ராஜிவ்காந்தி சாலை, சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்தார். சாப்ட்வேர் இன்ஜினியர். மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர். திருமணமாகிய பின்னும், சுய இன்ப பழக்கம் தொடர்ந்துள்ளார். குறிப்பாக பெண்கள் முன்னிலையில் சுய இன்ப பழக்கம் கொண்டவர். சம்பவத்தன்று பணி முடித்து அதிகாலை வீட்டிற்கு செல்லும்போது, விடுதி அருகே காரை நிறுத்திவிட்டு கல்லூரி மாணவியருக்கு சிக்னல் அளித்து, சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.அவரின் பெற்றோரை வரவழைத்த எச்சரித்த போலீசார் வழக்கு எதுவும் பதியாமல்அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி உடனடியாக அவர் பணி புரிந்த சாப்ட்வேர் நிறுவனத்துக்கு தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக வெளியூருக்கு பணி மாற்றல் செய்யப்பட்டார்.

பாதுகாப்பு அதிகரிக்கப்படுமா? : தென் சென்னை பகுதியில் ஏராளமான ஐ.டி.,நிறுவனங்கள் உள்ளன. அதில் பணிபுரியும் பெண்களுக்காக ஏராளமான விடுதிகள் உள்ளன. கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இவை அதிகம். இரவு நேரத்தில் இந்த விடுதிகளை வட்டமடிக்கும் இளைஞர்கள் அதிகம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சில பெண்கள் விடுதி உரிமையாளர்கள் நள்ளிரவில் நடமாடும் வாலிபர்கள் குறித்து புகார் செய்துள்ளனர். எனவே, பெண்கள் விடுதிகள் உள்ள பகுதிகளுக்கு இரவு ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.