தேடல்

மும்பை கோர்ட்டில் ஜூண்டால் ஆஜர்

மும்பை : மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அபு ஜூண்டால், டில்லியில் சமீபத்தில் கைது செய்யப்பட்டான். அவனிடம் டில்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். ஜூண்டாலின் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், அ‌வனை தங்களிடம் ஒப்படைக்குமாறு, மும்பை பயங்கரவாத தடுப்பு படையிடம் ஒப்படைக்குமாறு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவனை மும்பைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். இதனையடுத்து, மும்பை கொண்டுவரப்பட்ட அவன், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறான். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.