மதுரை மருத்துவமனையில் இறந்தவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

மதுரை :மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தவர் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.
மதுரை புதுராமநாதபுரம் ரோட்டை சேர்ந்தவர் சரவணகுமார்,36. தெற்காவணி மூல வீதியில், நகை வடிவமைப்பு தொழில் நடத்தி வந்தார். இவர் செம்பு, வெள்ளி கம்பிகள் மீது தங்கமுலாம் பூசி, தங்க வலையல்களாக மாற்றி, நிதி நிறுவனங்களில் அடகு வைத்து, பல லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக மோசடி வழக்கில், திலகர் திடல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சரவணகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைக்க போலீசார் கொண்டு சென்றனர். உடலில் காயங்கள் இருந்ததால், சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சரவணகுமார் இறந்தார். அங்கு, நேற்று பிரேத பரிசோதனை நடந்தது.
உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். அவர்கள், பிரேத பரிசோதனையை, போலீஸ் வீடியோகிராபர் மட்டும் படம் எடுக்க, அனுமதிக்கப்பட் டுள்ளார்.
எங்கள் தரப்பு வீடியோகிராபரையும் அனுமதிக்க வேண்டும். எங்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும், என்றனர்.