தேடல்

மதுரையில் வெளுத்துகட்டிய "ஆலங்கட்டி' மழை

மதுரை: மதுரையில் இன்று மாலை ஆலங்கட்டி மழை வெளுத்துகட்டியது.மதுரையில் கோடை முடிந்தாலும் ஜூலை 15 வரை வெயில் தாக்கம் நீடித்தது. இந்தாண்டு கோடை மழை பொய்த்தது. இதனால், சுட்டெரிக்கும் கத்திரி வெயில் நையப்புடைத்தது. தற்போது தென்மேற்கு பருவமழை காலதாமதமாக பெய்யத் துவங்கியுள்ளது. சில நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது.இன்று மாலை 5.45 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. சிறிது நேரத்தில் உருண்டை மற்றும் தட்டு வடிவில் கண்ணாடி போல் ஆலங்கட்டி மழை வெளுத்து கட்டியது. சுமார் 20 நிமிடங்கள் வரை வானத்தில் இருந்து ஆலங்கட்டிகள் பூமியில் கொட்டிய வண்ணம் இருந்தன. தார் ரோட்டில் சல...சல...சல... ஓசையுடன் ஆலங்கட்டிகள் விழுந்தன. வெளிச்சமாக இருந்ததால் மழையில் நனைந்தபடி குழந்தைகள் துள்ளி குதித்து மழையில் கைகளை குவித்து கொட்டும் ஆலங்கட்டிகளை அள்ளி சென்று ஆனந்தம் அடைந்தன.