ஓசூர்: ஓசூர் அருகே மேற்கு வங்க வாலிபர் தூக்கில் மர்மமாக இறந்து
கிடந்தார்.மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (23). இவர் ஓசூர்
அருகே பாகலூர் வெங்கடேஷ் நகரில் கல்குவாரியில் பணிபுரிந்து வந்தார். நேற்று
அதிகாலை அதேபகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக
கிடந்தார். அப்பகுதி மக்கள், பாகலூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார்
பிணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.விசாரணையில், நேற்று முன்தினம் மாலை
லட்சுமணனுக்கு ஊரில் இருந்து ஃபோன் வந்துள்ளது. அதன்பின் அவர் மனம் உடைந்த
நிலையில் காணப்பட்டநிலையில் கிடந்தார். அதன்பின் மரத்தில் தூக்கில் தொங்கிய
நிலையில் கிடந்தார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது ஒரு
காரணத்துக்காக யாராவது அவரை அடித்து கொலை செய்து பிணத்தை தொங்க விட்டு
சென்றார்களா? என பாகலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
