ஆதம்பாக்கம் : விபத்தில் சிக்கிய வாலிபருக்கு, முறையாக சிகிச்சை
அளிக்கவில்லை என கூறி, தனியார் மருத்துவமனையை, உறவினர்கள்
முற்றுகையிட்டனர். ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் விக்கி, 19.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் பகுதியில், தெரு ஓரத்தில்
தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை, 2.00 மணிக்கு, அந்த தெருவில், பின்னோக்கி
வந்த கார் மோதி, விக்கி நசுங்கினார்.தனியார் மருத்துவமனையில் முதலுதவி
பெற்று வீட்டுக்கு திரும்பிய சிறிது நேரத்தில், விக்கி இறந்தார். முறையாக
சிகிச்சை அளிக்கவில்லை என, விக்கியின் உறவினர்கள், மருத்துவமனையை
முற்றுகையிட்டனர். ஆதம்பாக்கம் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர்.
