தேடல்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் :பங்கேற்று பரிசு வெல்ல வீரர்களுக்கு அழைப்பு

ஊட்டி : சென்னையில் நடக்கவுள்ள மாநில விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்,

வீராங்கனைகளை தேர்வு செய்யும் வகையில், மாவட்ட அளவிலான போட்டிகள்

நடத்தப்படவுள்ளன.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதலமைச்சர் கோப்பைக்கான 2011-12ம் ஆண்டுக்கான மாநில அளவிலான ஆண்,

பெண்களுக்கான கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, கபடி, தடகள

விளையாட்டு போட்டிகள் இந்தாண்டு இறுதியில் சென்னையில் நடத்தப்படவுள்ளன;

இதில், பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்ய, மாவட்ட அளவில்

போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

கால்பந்து போட்டி வரும் 15 - 17 தேதிகளில் ஊட்டி எச்.ஏ. டி.பி., விளையாட்டு

அரங்கம்; ஹாக்கிப் போட்டி வரும் 16, 17 தேதிகளில் குன்னூர் அறிஞர் அண்ணா

மேல்நிலைப் பள்ளி மைதானம்; வாலிபால், கூடைப்பந்து போட்டிகள் வரும் 15,16,

கபடி போட்டி வரும் 16ம் தேதி; தடகளம் வரும் 14ம் தேதி ஊட்டி எச்.ஏ.டி.பி.,

விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளன. தடகள போட்டி ஆண்கள் பிரிவில், 100

மீட்டர், 800, 5,000 மீட்டர், உயரம், நீளம் தாண்டுதல், குண்டெறிதல்,

தட்டெறிதல், ஈட்டி எறிதல், பெண்களுக்கான பிரிவில் 100, 400, 3,000 மீட்டர்,

உயரம், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், தட்டெறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள்

நடத்தப்படவுள்ளன.

மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ்

வழங்கப்படும். குழுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோர் மாநில போட்டிக்கு

அனுப்பி வைக்கப்படுவர். குழுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும்

அணி, வீரர்களுக்கு முதல் பரிசாக தலா ஒரு லட்சம், 2ம் பரிசு 75 ஆயிரம், 3ம்

பரிசு 25 ஆயிரம், 4ம் பரிசு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று, நீலகிரிமாவட்ட அணிக்காக விளையாட

தேர்வு செய்யப்பட்டவர்கள் தமிழகத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்து

வருவதற்கான ஆவண சான்றை சமர்பிக்க வேண்டும். தடகள விளையாட்டு போட்டிகளில்

ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மாநில அளவிலான

முதலமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டியில் முதல் மூன்று இடங்களை

பெறுவோருக்கு, தலா ஒரு லட்சம், 75 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

மேற்கொண்டு விபரம் தேவைப்படுவோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகம்

(0423-2444084), கால்பந்து- மனோகரன் (94430-03329), தடகளம் - ராஜேந்திரன்

(94430-66112), ஹாக்கி - ராமசந்திரன் (94431-01561), கூடைப்பந்து-

விசுவநாதன் (94435-22965), வாலிபால் - ஜெகநாதன்(94430-52575), கபடி -

ராஜேந்திரன் (99949-25666) என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு,

அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.