தமிழகம் முழுவதும் பீர் விலை நேற்று முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டது. ரகத்திற்கு ஏற்ப, 5 ரூபாய் முதல், 10 வரை உயர்ந்துள்ளதால் பீர் பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில், 6,804 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள, 41 குடோன்களில் இருந்து சரக்குகள் வினியோகிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம், கடந்த ஆண்டு, 18 ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் கிடைத்தது. விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகளுடன், பீர் வகைகளும் அதிகளவில் விற்பனையாகின்றன.
தினசரி, ஒவ்வொரு குடோன்களில் இருந்தும், குறைந்தபட்சம், 2,000 கேஸ் பீர் சப்ளை ஆகிறது. சராசரியாக, நாளொன்றுக்கு, 3 லட்சம் கேஸ், டாஸ்மாக் கடைகளுக்கு செல்கிறது. இதில், ஸ்ட்ராங் வகை பீர்கள், 70 சதவீதமும், லெகர் வகை பீர்கள், 30 சதவீதமும் கடைகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன. ஒரு கேசில், 12 பாட்டில்கள் இருக்கும். இதன்படி, நாளொன்றுக்கு, 36 லட்சம் பீர் விற்பனையாகிறது.
பீருக்கு தட்டுப்பாடு : தற்போது கோடைகாலம் என்பதால், ஹாட் வகைகளான, ரம், பிராந்தி, விஸ்கிகளை விட, வெப்பத்தைத் தணிக்க, குளிர்ந்த பீர்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. இதனால், டாஸ்மாக் கடைகளில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் புதுப்புது பீர் வகைகளை, வரவழைத்து மதுபான கடைகளுக்கு வினியோகம் செய்து, தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது.
பீர் பிரியர்கள் அதிர்ச்சி : இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் பீர் விலை திடீரென உயர்த்தப்பட்டது. பீர் ரகங்களுக்கு ஏற்ப, குறைந்தபட்சம், 5 ரூபாய் முதல், அதிக பட்சம், 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. இதனால், டாஸ்மாக் கடைகளுக்குச் சென்ற பீர் பிரியர்கள், இந்த விலை உயர்வால் கடும் அதிர்ச்சியடைந்தனர். விற்பனையாளர்களிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து, கடைசியில் ஏற்றப்பட்ட விலைக்கே பீர் வாங்கிச் சென்றனர்.
குழப்பத்தைப் போக்க நடவடிக்கை : இது குறித்து, டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தற்போது 650 மி.லி., பீர் பாட்டில் ஒன்றுக்கு, 65, 70, 75, 80, 85, 90, 95 என்ற 7 அதிகபட்ச சில்லறை விற்பனை விலைப் பிரிவுகளில் விற்கும்போது, நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிகமான விலைக்கு பீர் வகைகள் விற்பதற்கான சாத்தியக் கூறு இருந்து வருகிறது. எனவே, பீர் வகைகள் மீதான அதிகபட்ச சில்லறை விற்பனை விலைப் பிரிவுகளை ஆய்வு செய்து, 7லிருந்து 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பீர் வகைகளில் ஆல்கஹாலின் அளவானது 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வெவ்வேறு அளவுகளில் இருந்து வருவதால், அதிக ஆல்கஹால் கொண்ட பீர் வகைகளுக்கு, உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும், 5 ரூபாய் நாணயம் மற்றும் நோட்டுகளின் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், பீர் விலைகளில் மறு சீரமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் 70, 80, 90, 100 ரூபாய் என, 4 விலைகளில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குவார்ட்டர் முதலிடம் : கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது வகைகளில் கூடுதலாக 24 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 21 பிரீமியம் ரகங்கள், 2 நடுத்தர ரகங்கள், ஒரு சாதாரண ரகம் இடம் பெற்றுள்ளது. புதிய ரகம் அறிமுகத்தினால், 20 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. சாதாரண சரக்குகள் 40 சதவீதம், நடுத்தரமான சரக்குகள் 40 சதவீதம், உயர்தரமான சரக்குகள் 20 சதவீதம் என விற்பனையாகிறது. சாதாரண சரக்குகள், 65 ரூபாயிலிருந்தும், நடுத்தர சரக்குகள், 75 ரூபாயிலிருந்தும், உயர்தர சரக்குகள், 80 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன. குவார்ட்டர் பாட்டில் (180 மில்லி) 76 சதவீதமும், ஆப் பாட்டில் (375 மில்லி) 22 சதவீதமும், புல் பாட்டில் (750 மில்லி) 2 சதவீதம் என்ற கணக்கில் விற்பனைகள் நடக்கின்றன. குவார்ட்டர் பாட்டில் தான் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.
விலை உயர்வு விவரம் (அடைப்புக்குள் பழைய விலை)
மார்கோபோலோ, பிளாக் நைட் , கோல்டன் ஈகிள் டீலக்ஸ் பிரிமியம், கோல்டன் ஈகிள் லேகர் : புதிய விலை ரூ.70 (பழைய விலை 65)
கல்யாணி பிளாக் லேபிள் பிரிமியம் லேகர், ரூ.80 (பழைய விலை-75)
கிங் பிஷர் சூப்பர் ஸ்ட்ராங் பிரிமியம் ரூ.80 (பழைய விலை-75)
புல்லட் சூப்பர் ஸ்ட்ராங் ரூ.80 (பழைய விலை-75)
ஜிங்காரோ மெகா ஸ்ட்ராங் பிரிமியர் ரூ.80 (பழைய விலை-75)
ஓரியன் லைட் பிரிமியம் பீர் ரூ.90 (பழைய விலை-85)
ஹேவார்ட்ஸ் 5000 அல்ட்ரா பிரிமியம் ஸ்ட்ராங் ரூ.90 (பழைய விலை-85)
கிங்பிஷர் கோல்டு பிரீமியம் ரூ.80 (பழைய விலை 70)
சாண்ட்பைபர் பிரீமியம் ரூ.80 (பழைய விலை 70)
மெட்ராஸ் டில்ஷனர் டீலக்ஸ் ரூ.80 (பழைய விலை 70)
ஓரியண்ட் 6000 சூப்பர் ஸ்டார்ங் ரூ.80 (பழைய விலை 70)
எஸ்என்ஜே 10000 சூப்பர் ஸ்ட்ராங் 90 (பழைய விலை 80)
ஹைவோல்டேஜ் சூப்பர் ஸ்டாரங் 90 (பழைய விலை 80)
பிரிட்டிஷ் எம்பயர் அல்ட்ரா பிரீமியம் எக்ஸ்குளூசிவ் ரூ. 100 (பழைய விலை 90)
கோல்ட் பிரீமியம் ஸ்ட்ராங் ரூ. 100 (பழைய விலை 90)
மேக்ஸ் 11000 சூப்பர் ஸ்ட்ராங் ரூ.100 (பழைய விலை 90)
-நமது சிறப்பு நிருபர்-
தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
தினமலர் – வி, 14 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 20-6-2013
16 புகைப்படங்கள் - 8 நிமிடங்கள் முன்தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 15 நிமிடங்கள் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 27 நிமிடங்கள் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 37 நிமிடங்கள் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 42 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
- பீர் பாட்டில்கள் விற்பனையில் அரசுக்கு …
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 …
- ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.184 …
- தங்கம்சவரனுக்கு ரூ.80 உயர்வு
- வெல்லம் உற்பத்தி பாதிப்பு: விலை கடுமையாக …
- யூரியாவிற்கான சில்லரை விலை உயர வாய்ப்பு …
- தடைக்காலத்துக்கு பின் இறால் வரத்து …
- ரூபாய் மதிப்பு சரிவால் வீட்டு உபயோக …
- கடந்த இரு தினங்களில் தங்கம் சவரனுக்கு …
- தங்கம் விலை உயர்வு! சவரனுக்கு …
- ஆபரண தங்கம் விலை மேலும் விறு …
- தங்கம் விலை உயர்வு : சவரனுக்கு …
- தமிழகத்தில் முட்டை விலை 11 காசு …
- ஏற்றுமதி ரூ.1.35 லட்சம் கோடியாக …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
19 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தன சென்செக்ஸ்! 423 புள்ளிகள் வீழ்ச்சி
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வரலாறு காணாத வீழ்ச்சி - ரூ.60-ஐ தொட்டது இந்திய ரூபாயின் மதிப்பு
தினமலர் - 1 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க சதி: பாதுகாப்புக்கள் தீவிரம்
தினமலர் - 2 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்37 நகரங்களில் எம்.டி.எஸ்., சேவை
தினமலர் - 5 மணிநேரம் முன்திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு
தினமலர் - 8 மணிநேரம் முன்
