தேடல்

மாவட்டத்தில் 18 மையங்களில் இன்று குரூப் 2 எழுத்து தேர்வு

விழுப்புரம் : விழுப்புரத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமை தாங்கினார். தேர்வாணைய சார்பு செய லர் பாலகிருஷ்ணன், பிரிவு அலுவலர் பாலசுப்ரமணியன், ஆர்.டி.ஓ., ராதாகிருஷ்ணன், கனிமவள துணை இயக்குனர் கந்தன், தாசில்தார் ராஜேந் திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஆலோசனை வழங்கி பேசியதாவது :தற்போது பணியில் உள்ள அரசு ஊழியர்களில், தலைமைச் செயலக பணிக்கு செல்பவர்களுக்காக, தேர்வாணையம் சார் பில், குரூப் 2 தேர்வு (4ம் தேதி) இன்று நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 18 மையங்களில், 5,360 பேர் தேர்வு எழுதுகின்றனர்.விழுப்புரம் மகளிர் கல்லூரி, நகராட்சி ஆண்கள் பள்ளி, அரசு கல்லூரி, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 18 மையங்களில், தலா 300 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி பகல் 1 மணிக்கு முடிகிறது.தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் கேமிரா அமைத்து கண்காணிக்கப்படுகிறது. ஆர்.டி.ஓ.,- டி.எஸ்.ஓ., ஆதிதிராவிட நல அலுவலர் தலைமையில் பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்படும்.இவ்வாறு டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி ஆலோசனை வழங்கினார்.