தேடல்

மது விற்றவர் கைது

அவனியாபுரம்:அவனியாபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் மது விற்றவரை பெருங்குடி போலீசார் கைது செய்தனர்.பெருங்குடி ஓ.ஆலங்குளத்தை சேர்ந்தவர் கோபிநாத், 34. இவரது வீட்டில் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்த 15 குவாட்டர் பாட்டில்களை போலீசார் கைப்பற்றி, கோபிநாத்தை கைது செய்தனர்.