முஷாரப்பை கைது செய்ய இண்டர்போல் உதவி: அமைச்சர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ்முஸாரப்பை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவி கோரப்படும் என உள்து‌றை அமைச்சர் ரகுமான் மாலிக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்‌தானில் கடந்த 2007-ம் ஆண்‌டு டிசம்பர் மாதத்தில் ந‌டந்த பொது தேர்தல் பிரசாரத்தின் போது பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பெனாஷிர் பூட்டோ தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார்.தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பூட்டோவிற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடே சம்பவத்திற்கு காரணம் எனவும் இதற்கு முஷாரப் குற்றவாளி என முடிவானது. இந்நிலையில் முஷாரப் லண்டனிற்கு குடி‌யேறினார். இருப்பினும் அவரை கைது ‌செய்வதற்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
மேலும் தற்போது பாகிஸ்தானில் தேர்தல நடைபெற இருப்பதை முன்னிட்டு அதில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் முஷாரப் . போட்டியிட வரும் முஷாரப்பை அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் விதத்தில் கைது செய்யப்பட்டு அவர் கொல்லப்படலாம் என உள்ளூர் ‌செய்தி நிறுவனம் ‌ஒன்று தகவல் தெரிவித்தது. இந்நிலையில் முஷாரபை ‌கைதுசெய்ய சர்வதேச போலீசார்(இண்டர் போல்) உதவி கோரப்படும் என உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த வக்கில் ஹஸ்மத் ஹபீப் என்பவர் கூறுகையில் முஷாரப் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேசபோலீசார் உதவி கோரியிருப்பது நல்ல சமயம் தான். ஆனால் இது எந்தளவிற்கு சாத்தியமாகும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.