ஒரு குழந்தைக்கு தாயானதில் பேரின்பம் அடைந்துள்ளேன், அதனால் நடிப்பை பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னர் நடிக்காமல் இருந்து வரும் ஐஸ்வர்யா சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய், தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு லண்டன் சென்றுள்ளார். அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து எம்.பி. அளித்த விருந்தில் பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், நான் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளதை எண்ணும் போது பேரின்பம் அடைகிறேன். சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சொல்லப்போனால் அதைப்பற்றியே யோசிக்கவில்லை. அப்படியே மீண்டும் நடிக்க வந்தாலும் எப்படிப்பட்ட ரோலில் நடிப்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். மேலும் என்னுடைய வாழ்க்கையிலேயே அபிஷேக்கை மணந்த தினம் தான் சிறப்பான நாள் என்றார்.
தாய்மை அடைந்தது பேரின்பம்! நடிப்பை பற்றி யோசிக்கவில்லை! ஐஸ்வர்யா ராய்!
தினமலர் – தி, 18 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஆஜராக வந்த குருநாத்தை கைது செய்தது மும்பை போலீஸ்
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க கடும் சட்டம் அவசியம் : பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பார்லி., சட்டசபைகளில் அமளி ஜனாதிபதி பிரணாப் கவலை
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
தினமலர் - 1 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்வலுக்கிறது எதிர்ப்பு : பதவி விலக சீனிவாசன் மறுப்பு
தினமலர் - 2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

