சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் வந்த போது, அவர்கள் உள்ளே நுழையாதபடி, அட் ஹாக் கமிட்டியினர், பூட்டு போட்டிருந்ததால், திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன், தாணு தலைமையிலான நிர்வாகிகளுக்கும், இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலா, அட் ஹாக் கமிட்டியினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. அட் ஹாக் கமிட்டி செயல்படக் கூடாது என, சமீபத்தில், ஜெயலட்சுமி என்ற தயாரிப்பாளர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஜூலை 6ம் தேதி வரை, சங்கத்தின் வங்கிக் கணக்குளை செயல்படுத்த, அட் ஹாக் கமிட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதரவாளர்கள், நேற்று மாலை தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் உள்ளே நுழையாத வகையில், சங்கத்திற்கு, அட் ஹாக் கமிட்டியினர் பூட்டு போட்டிருந்தனர். இதனால், அவர்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர். இன்று, மீண்டும் சந்திரசேகரன் ஆதரவாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரவுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, இப்ராகிம் ராவுத்தர் அணியினர், தங்களது ஆதரவாளர்களை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இரு தரப்பினரும் அலுவலகத்தில் சந்தித்தால், மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு: சந்திரசேகரன் ஆதரவாளர்கள் அதிருப்தி!
தினமலர் – பு, 20 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஆழ்வார்குறிச்சியில் பலத்த மழை :5 பேர் காயம்
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பைனலுக்கு செல்லுமா சென்னை: இன்று மும்பையுடன் டிஷ்யூம், டிஷ்யூம்
தினமலர் - 1 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்சினிமாவில் ஸ்ரீசாந்த்: சகோதரர் தயாரிப்பில் நடிக்க ஏற்பாடு
தினமலர் - 1 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பாட்மின்டன்: இந்தியா அவுட்
தினமலர் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்ஜோஷ்னா சின்னப்பா தகுதி
தினமலர் - 1 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

