உத்திரமேரூர் : விளக்கில், காகிதத்தை காண்பித்து விளையாடிய சிறுமி, தீயில்
கருகி இறந்தார்.அனுமந்தண்டலத்தை சேர்ந்தவர் சத்தியநாராயணமூர்த்தி மகள்
ஹேமாவதி, 8.மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 28ம் தேதி,
விளக்கில், காகிதத்தை எரித்து விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, உடையில்
தீ பிடித்து, பலத்த காயமடைந்தாள்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, பின்,சென்னை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இறந்தாள்.
இது குறித்து பெருநகர் உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தி விசாரித்து வருகிறார்.
