ரசிகர்களுக்கு அமதாப் பச்சன் நன்றி!

தனக்கு வயிற்று வலி குணமாக வேண்டும என்று பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நடிகர் அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமிதாப்பச்சனுக்கு வயிற்றுவலி ஆபரேசன் நடந்தது. ஆபரேசனுக்குப் பிறகு அமிதாப் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தான் விரைவில் குணம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அமிதாப்பச்சன் நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், உங்களுடைய அன்பும், வாழ்த்துக்களும் ஒருபோதும் தோற்றது கிடையாது. இதற்காக பட்ட கடனை, நான் ஒருபோதும் திருப்பி செலுத்த முடியாது. நீங்கள் அனைவரும் விந்தையானவர்கள். உங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.