தர்மபுரியில் ரூ.96 லட்சம் மோசடிஒருவர் கைது; ஐந்து பேருக்கு "வலை

தர்மபுரி: பாலக்கோடு அருகே, 96 லட்ச ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக,

வாலிபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஐந்து பேரை போலீஸார் தேடி

வருகின்றனர்.பாலக்கோடு தாலுகா, பெல்ரம்பட்டியை சேர்ந்தவர் அரசு

துவக்கப்பள்ளி ஆசிரியர் ஜலிம்ஷா. இவர், பச்சினம்பட்டியை சேர்ந்த

உதயசந்திரன் (45), இவரது மனைவி பரிமளா (38), மாரண்டஹள்ளியை சேர்ந்த

ஹோமியேபதி டாக்டர் ஜெயசந்திரன் (43), இவரது மனைவி ஜெயஸ்ரீ, மாரண்டஹள்ளியை

சேர்ந்த ஜெயராஜன் (40), சோலை (37) ஆகியோர் சேர்ந்து நடத்திய பங்கு

சந்தையில் பணம் கொடுத்திருந்தார்.

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த

எம்.எஸ்.அக்மன்ஸ் (பி) லிமிடெட் பெயரில் பங்குகள் வாங்க பணம் கொடுத்தால்,

10 சதவீதம் கமிஷன் கிடைக்கும் எனக் கூறி ஜலிம்ஷா உள்ளிட்ட அவரது

நண்பர்களிடம் இருந்து உதயசந்திரன் உள்ளிட்ட ஆறு பேரும் கடந்த 2010 ஆகஸ்ட்

முதல் 2011 ஆகஸ்ட் வரை, 96 லட்ச ரூபாய் வாங்கியுள்ளனர்.ஆனால், ஓராண்டு

நிறைவு பெற்றும் பணம் கொடுத்தவர்களுக்கு, கமிஷன் தொகையும், அசல் தொகையும்

வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட ஜலிம்ஷா எர்ணாகுளத்தில் உள்ள நிறுவனத்தை

தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்களிடம் வசூல் செய்த பணத்தை அங்கு

செலுத்தவில்லை, எனத் தெரிந்தது.அதிர்ச்சி அடைந்த ஜலிம்ஷா, தர்மபுரி மாவட்ட

குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்

ராதாகிருஷ்ணன் விசாரித்து, உதயசந்திரனை கைது செய்தார். ஹோமியோபதி டாக்டர்

ஜெயசந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரும் தலைமறைவாகி விட்டனர்.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் இவர்களிடம், பலரும் பணம் கொடுத்து

ஏமாந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்த போதும், ஜலிம்ஷா

மட்டும் புகார் கொடுத்துள்ளார் என, போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.