தேர்வு எழுதும் மாணவர்களுக்காகரூ.10 ஆயிரம் எம்.எல்.ஏ., வழங்கல்

பெரம்பலூர்: தேர்வு எழுதும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக, புத்தகங்கள்

வாங்க பெரம்பலூர் மைய நூலகத்துக்கு 10 ஆயிரம் ரூபாயை, பெரம்பலூர்

எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்ச்செல்வன் மாவட்ட நூலக அலுவலரிடம்

வழங்கினார்.பெரம்பலூரில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, பெரம்பலூர்

மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தமிழ் நூல் வெளியீட்டாளர்,

விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து பிப்., நான்காம் தேதி முதல்

மாபெரும் புத்தக திருவிழாவை நடத்துகிறது.

இதன் துவக்க விழாவுக்கு பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தலைமை வகித்தார்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய

நூலகம், கிளை நூலகங்களுக்கு தனிநபர் ஒருவர் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலான

மதிப்பிலான புத்தகங்களை வழங்குபவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம்

கவுரவிக்கப்படுவர்.இவ்வாறு அவர் பேசினார்.இதன் அடிப்படையில் பெரம்பலூர்

எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்ச்செல்வன், நூலக வாசகர்களின் பயன்பாட்டுக்காக,

குறிப்பாக தேர்வு எழுதும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக புத்தகங்கள் வாங்க,

பெரம்பலூர் மைய நூலகத்துக்கு 10 ஆயிரம் ரூபாயை மாவட்ட நூலக அலுவலர்

ரவீந்தரனிடம் வழங்கினார்.