திருச்செந்தூரில் மாசித்திருவிழா துவங்கியது

தூத்துக்குடி: திருச்செந்தூர் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலின் மாசித்திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி இன்று அதிகாலை 5.35 மணிக்கு ‌கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ‌கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பின் மார்ச் 6-ம் தேதி திருவிழா நிறைவடைகிறது. அதுவரை ‌கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.