சாயல்குடி:கடலாடியில் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் ரோட்டின் இருபுறமும்
ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் நிறுத்துவதால், பஸ்கள்
செல்லமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கிறது.
கடலாடியைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும்,
தாலுகாவிற்கு தலைமை இடம் என்தால், 200க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து
தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பெரும்பாலான கிராமங்களுக்கு
பஸ் போக்குவரத்து கிடையாது. இதனால் அந்த கிராமங்களில் இருந்து பலர் ஆட்டோ,
சரக்கு வாகனங்களில் வருகின்றனர்.இதனால், இங்கு வாடகை வாகனங்கள்
அதிகரித்துள்ளது. இருந்தும், வாகன ஸ்டாண்டு வசதி இல்லை. இதனால் பஸ்
ஸ்டாண்டின் நுழைவு வாயிலிலும், ரோட்டின் இரு புறங்களிலும் வாகனங்களை
நிறுத்துகின்றனர். பஸ் ஸ்டாண்டும், அதற்கு செல்லும் வழித்தடமும் குறுகி
இருப்பதால், பஸ்கள் வந்து செல்வதற்கு சிரமப்படுவதோடு, சில நேரங்களில்
விபத்துகளும் நடக்கிறது. இது குறித்து ஊராட்சி தலைவர் முருகன் கூறும்போது:
வாகன ஸ்டாண்டு அமைப்பதற்கு ஊராட்சியில் பொது இடம் இல்லை. வாகனங்களை ஒரு
புறமாக நிறுத்த அதன் சங்க தலைவரிடம் வலியுறுத்தி உள்ளேன்,
என்றார்.ரோட்டையொட்டி வாகனங்களை நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார்
நியமிக்க வேண்டும்.
