அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் ரோட்டோர தூசுகளால் மூச்சு திணறல்போன்ற
நோய் ஏற்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர
வேண்டும் .அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் விருதுநகர் ரோடு,
சத்தியமூர்த்தி பஜார், சொக்கலிங்கபுரம், டெலிபோன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில்
வாறுகால் கட்டும் பணி , சிமென்ட் சிலாப் பதிக்கும் பணிகள் நடந்து வந்தன.
இதற்கான தளவாட சாமான்கள் ஆங்காங்கு கொட்டப்பட்டன. தற்போது பணிகள் முடிந்து
மாதங்கள் பல ஆகியும் மீதமுள்ள பொருட்களை எடுத்து செல்லல்லை. கிரஷர் மண்ணை
கொட்டி வைத்திருப்பதால் காற்றில் பறந்து, அப்பகுதியில் செல்வோருக்கு மூச்சு
திணறல் போன்ற நோயை ஏற்படுத்துகிறது. இதனால் அப்பகுதி கடைகளிலும் தூசி
பறக்கிறது. மண் குவியலால் டூவிலரில் செவ்வோருக்கு விபத்து நிலை உள்ளது.
நகரின் பல பகுதிகளிலும் இது போன்ற தளவாட பொருட்கள் உள்ளதால், இதன் மீது
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
