தேடல்

திருடிவிட்டு "செக்ஸ்' புகார் தப்ப முயன்ற பெண்கள் கைது

சாஸ்திரி நகர் : வேலை பார்த்த வீட்டில், நகைகளை திருடிய, தாய், மகள்

இருவரையும் போலீசார் கைது செய்தனர். பெசன்ட்நகர், 25வது குறுக்கு தெருவை

சேர்ந்தவர் குருசாமி, 78. இவரது வீட்டில் இருந்த ஆறு லட்ச ரூபாய்

மதிப்புள்ள தங்க நகைகள் மாயமாயின. போலீசார் விசாரித்துவந்தனர்.கடந்த 15

நாட்களுக்கு முன் அங்கு வேலைக்கு சேர்ந்த, ஊரூர் குப்பம் பிங்கி என்ற

கிருஷ்ணகுமாரி, 24 மற்றும் அவரது தாய் ராணி ஆகியோரிடம் விசாரணை

நடத்தியதில், நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டனர். துரைப்பாக்கத்திலும்

இதே முறையில், ஒரு வீட்டில்நகைகளை திருடியதாக புகார் செய்யப்பட்டுள்ளதும்

விசாரணையில் தெரிய வந்தது.போலீசார், கிருஷ்ணகுமாரி மீது சந்தேகம்

அடைந்து, விசாரித்தபோது, நகைகளை நான்திருடவில்லை. குருசாமி என்னிடம்

அத்துமீறி நடந்து கொண்டார். அதற்கு அன்பளிப்பாகத்தான் நகைகளை கொடுத்தார்,

என்று கூறியுள்ளார். பின்னர் நடந்த விசாரணையில், உண்மையை ஒப்புக் கொண்டார்.