தேடல்

திரைப்பட கல்லூரி பட்டயப் படிப்பு விண்ணப்பம் வரவேற்பு: கலெக்டர்

நாமக்கல்: திரைப்படக் கல்லூரி பட்டய படிப்பிற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பிற்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. இயக்குதல், திரைக்கதை வசனம் எழுதுதல் மற்றும் தொலைக்காட்சி பட்டயம் தயாரிப்பு, ஒளிப்பதிவு, படம் பதனிடுதல், ஒலிப்பதிவு மற்றும் ஒலிப் பொறியியல், படத் தொகுப்பு மற்றும் தொலைக்காட்சி பட்டயம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.பட்டயப் படிப்பிற்கு, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில், ஒளிப்பதிவு, படம் பதனிடுதல், ஒலிப்பதிவு, ஒலிப் பொறியியல் ஆகிய படிப்புக்கு, இயற்பியல், வேதியியல் மற்றும் மின்னணுவியல், தொலைத்தொடர்பு பொறியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படத்தொகுப்பு மற்றும் தொலைக்காட்சி பட்டயம் படிப்பிற்கு, மேல்நிலைக் கல்வி முடித்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், வரும் 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.