தேடல்

ரதயாத்திரை பாதையில் வெடிகுண்டு

ஆமதாபாத் : ஆமதாபாத் அருகே உள்ள கோமதிபூர் பகுதியில் கோயில் ரத யாத்திரை நாளை நடைபெற உள்ளது. ரத யாத்திரை நடைபெறும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த மர்ம பைக் ஒன்றில் இருந்து 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அகற்றி உள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைப்பேசி அழைப்பில் வந்த தகவலை அடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வெடிகுண்டு அகற்றப்பட்டுள்ளது. இதில் 2 நபர்கள் ஈடுபட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.