கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 18 கோடி ரூபாய் உலக வங்கி நிதியுதவியுடன் கோமுகி நதி உபவடி நில பகுதி அணைக்கட்டுகள், பாசன வரத்து வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் கடைகோடி பகுதியாக கள்ளக்குறிச்சி உள்ளது. கிராமங்களையே முழுமையாக உள்ளடக்கிய இப்பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் ஏரி, அணைக்கட்டு பாசனத்தையே அதிகம் நம்பி இருக்கின்ற நிலை உள்ளது. இந்நிலையில் பாசன வாய்க்கால்கள், வரத்து வாய்க்கால்கள் பராமரிப்பின்றிதூர்ந்து நாளடைவில் காணாமல் போய்விடுவதால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையை மாற்றிட பாசன வாய்க்கால், அணைக்கட்டுகளை புனரமைக்கும் கள்ளக்குறிச்சி கோமுகி உப வடிநிலப்பகுதி வெள்ளாறு கோட்ட திட்டப்பணிகள் உருவாக்கப்பட்டது.உலக வங்கி நிதி உதவியுடன் இத்திட்டத்தை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் விவசாயம் சார்ந்த துறைகளான பொதுப்பணித்துறை, வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைத்துறை, வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்கம், வேளாண் பல்கலைக் கழகம், வேளாண் பொறியியல் துறை, மீன்வளத்துறை ஆகிய எட்டு துறைகளை அரசு ஒருங்கிணைத்து விவசாயிகளின் எண்ணப்படி பாசனத்தை உறுதி செய்துள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்த 68 கிராமங்களில் பாசன விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளே தங்களுக்கு வேண்டிய ஆயக்கட்டு பாசனத்தை உறுதி செய்வதற்காக திட்டங்களை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைந்த அரசு துறை அதிகாரிகள் குழுவினரிடம் சமர்ப்பித்தனர். இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் 68 கிராமங்களில் 5,000 ஏக்கர் விளை நிலங் கள் பாசனம் பெறும் வகையில் ஏரி, வரத்து வாய்க்கால், மதகுகள், அணைக்கட்டு பராமரிக்கஉலக வங்கி நிதியுதவியுடன் 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது டெண்டர் விடப்பட்டு கோமுகி நதி உபவடி நில விவசாய அபிவிருத்தி திட்ட பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.இத்திட்டத்தில் 42 அணைக்கட்டுகள் புனரமைப்பு, 80 கி. மீட்டர் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்பணிகளை உலக வங்கிநிபுணர் குழுவினர், எட்டு துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்து துரிதப்படுத்தி வருகின்றனர்.மகத்தான ஆயக்கட்டு பாசனத்தை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
ரூ.18 கோடியில் அணைக்கட்டு, பாசன வாய்க்கால்கள்...
தினமலர் – வி, 28 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- வங்கி கடன் வசூலுக்கு "எஸ்.எம்.எஸ்'- …
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக...சமூக …
- மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 …
- அஞ்சல் துறை வங்கி துவங்க நிதி அமைச்சகம் …
- திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து …
- நிதி அமைச்சகம் ரூ.1 லட்சம் கோடிஎரிபொருள் …
- பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.22,749 …
- நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு …
- மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு …
- வங்கி, பாதுகாப்பு நிறுவனங்களின் ஐ.டி., …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கால்பந்து: பேயர்ன் முனிக் அணி சாம்பியன்
தினமலர் - 1 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்கம் விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்சீனாவுடனான எல்லை பிரச்சினை: ஒத்துழைப்பும், போட்டியும் உள்ளது என்கிறார் அந்தோனி
தினமலர் - 2 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்அம்மா உணவகங்களில் பொங்கல் விற்பனை: மக்கள் விருப்பம்
தினமலர் - 3 மணிநேரம் முன்குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
