தெற்கு மாவட்ட தி.மு.க.,செயற்குழு கூட்டம்

அரூர்: அரூரில் தர்மபுரி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.முன்னாள்

மாவட்ட அவைத்தலைவலர் கந்தசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர்

கோவிந்தராஜன், சட்ட திட்டக்குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன் ஆகியோர்

முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் முல்லைவேந்தன் வரவேற்றார்.

ஸ்டாலின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி முதல் ஒருவார

காலத்துக்கு மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் கொடியேற்றுதல் அனைத்து

ஒன்றியங்களிலும இளைஞர் எழுச்சி நாள் பொது கூட்டங்கள் நடத்துவது ஏழை எளியோர்

மாற்று திறனாளிகளுக்கு வேட்டி, சேலை, உணவு வழங்குதல், மாணவர்களுக்கு இலவச

நோட்டு புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.ஒன்றிய

பொறுப்பாளர்கள் வேடம்மாள், பொன்னுசாமி, சித்தார்த்தனன், மனோகரன், நகர

செயலாளர்கள் முல்லை செழியன் புஷ்பராஜ், இளைஞரணி அமைப்பாளர் கைவேந்தன், துணை

அமைப்பாளர் செல்லதுரை, செங்கண்ணன், சண்முகநிதி, பாண்டியன், பாரி,

தமிழரசன், தாஸ், மோகன், காட்டு ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.