தேடல்

தாறுமாறாக பஸ் ஓட்டிய"@பாதை' டிரைவர் மீது வழக்கு

கடலூர்:குடிபோதையில் பஸ்சை ஓட்டிய தனியார் பஸ் டிரைவர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.புதுச்சேரியிலிருந்து, நேற்று மாலை கடலூர் நோக்கி, பி.ஒய்., 01 பி.ஆர். 6779 எண்ணுள்ள ஸ்ரீராதாகிருஷ்ணன் என்ற தனியார் பஸ், 60க்கும் @மற்பட்ட பயணிகளுடன், கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை, புதுச்சேரி மாநிலம், திருவண்டார்கோவிலைச் சேர்ந்த டிரைவர் முத்துகுமரன்,26, என்பவர் ஓட்டி வந்தார்.

இவர், பஸ்சை வேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டியதால், பயணிகள் அச்சமடைந்து டிரைவரை எச்Œரித்தனர். ஆனாலும், பஸ்சின் வேகம் குறையவில்லை. அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர், கடலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அலைபேசியில் தகவல் கொடுத்தார். போக்குவரத்து போலீசார், பஸ்சை செம்மண்டலம் சிக்னல் அருகே நிறுத்தி, டிரைவரிடம் விŒõரித்தனர். அவரை, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், அவர் மது அருந்தியிருப்பது உறுதி öŒ#யப்பட்டது. இதையடுத்து, டிரைவர் முத்துகுமரன் மீது, போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்தனர். பின், அவரை கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.