லண்டன்:ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், ஒலிம்பிக் ஜோதி லண்டன் வந்து சேர்ந்தது.லண்டனில் வரும் 27ம் தேதி 30வது ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதற்கான ஜோதி ஓட்டம் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் நடந்தது வந்தது. இதனிடையே ஒலிம்பிக் துவங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், ஜோதி லண்டன் நகரை வந்து சேர்ந்தது.நேற்று முன்தினம் லண்டனில் சூரியன் மறையத் துவங்கியதும், தேம்ஸ் நதிக்கரையில் கடற்படையின் ஹெலிகாப்டர் வட்டமிடத் துவங்கியது. சிறிது நேரத்தில் அதிலிருந்து பெல்ட் மூலம் இணைக்கப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, அப்படியே தொங்க விடப்பட்டது. பின், 2008 ஆப்கன் போரில் காயமடைந்து மீண்ட வீரர் வில்லியம்ஸ், 23, என்பவரிடம் இருந்து, 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் (800, 1500 மீ.,) வென்ற கெல்லி ஹோல்ம்ஸ் ஜோதியை பெற்றுக்கொண்டார். இதைப் பார்ப்பதற்கு ஹாலிவுட் அதிரடி சினிமாவைப் போல இருந்தது.இந்த ஜோதியை இந்தவாரம் முழுவதும் லண்டனில் அனைத்து பகுதிகளுக்கும், 982 பேர் எடுத்துச் செல்வர். கடைசியாக எடுத்து செல்பவர், ஒலிம்பிக் துவக்க விழாவின் போது, மைதானத்துக்குள் கொண்டு வருவார்.--
லண்டனில் ஒலிம்பிக் ஜோதி
தினமலர் – ச, 21 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்ஓட்டு வங்கி அரசியலை எதிர்ப்பதே பா.ஜ.க.,:மோடி
தினமலர் - 2 மணிநேரம் 1 நிமிடம் முன்சீன பிரதமர் இன்று இந்தியா வருகை
தினமலர் - 4 மணிநேரம் முன்பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை
தினமலர் - 6 மணிநேரம் முன்ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.18,422 கோடியாக வளர்ச்சி
தினமலர் - 6 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
-336.jpg)
