தேடல்

தில்ஷன், சங்ககரா சதம்

காலே:பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தில்ஷன், சங்ககரா சதம் அடிக்க, இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று காலேயில் துவங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்தனா பேட்டிங் தேர்வு செய்தார்.இலங்கை அணிக்கு பரணவிதனா(24) ஏமாற்றினார். சிறப்பாக ஆடிய தில்ஷன் சதம் அடித்தார். இவர் 101 ரன்களுக்கு அஜ்மல் சுழலில் சிக்கினார். சங்ககராவும் சதம் அடித்தார். கேப்டன் ஜெவர்தனாவும் தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. சங்ககரா(111*), ஜெயவர்தனா (55*) அவுட்டாகாமல் உள்ளனர்.