அவிநாசி: திருப்பூர் அருகே, கல்லூரி மாணவர்கள் வந்த பஸ், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவர் உயிரிழந்தனர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர். கேரள மாநிலம், திருச்சூர், ராயல் பொறியியல் கல்லூரி மாணவர், 16 பேர் மற்றும் மாணவியர், 34 பேர், தனியார் சொகுசு பஸ்சில், கல்விச் சுற்றுலா சென்றனர். நான்கு நாட்களுக்கு முன், திருச்சூரிலிருந்து கிளம்பிய அவர்கள், தமிழகத்தில் கொடைக்கானல், ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களை பார்த்து, பெங்களூரு சென்றனர்.
அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, திருச்சூர் நோக்கி பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். திருச்சூரை சேர்ந்த, ரித்திஷ், 28, பஸ்சை ஓட்டினார். உடன் உதவியாளர் கண்ணன், 30, முன்புறம் அமர்ந்திருந்தார்.
நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், திருப்பூர் மாவட்டம், சரவணபுரம் அருகே பஸ் சென்ற போது, காட்டன் பேல்கள் ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் எதிர்பாராமல் மோதியது. இதில், பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. டிரைவர் ரித்திஷ் மற்றும் கண்ணன் இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; பஸ்சில் சென்ற மாணவர்களில், 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.
லாரி - கல்லூரி பஸ் மோதல் : இருவர் பலி; 10 பேர் படுகாயம்
தினமலர் – வி, 24 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர்
தினமலர் - 54 நிமிடங்கள் முன்ஏமாற்றம் அடைந்தோம் : டிராவிட் சோகம்
தினமலர் - 57 நிமிடங்கள் முன்தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்- இன்று நரசிம்ம ஜெயந்தி
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்
தினமலர் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்ஊழல் விவகாரங்களில் தவறு செய்தவர்களை அரசு தண்டிக்கும் : பிரதமர் உறுதி
தினமலர் - 2 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
