ஓசூர்: ஓசூர் காமராஜ் காலனியில் கட்டி முடிக்கப்பட்ட உள் விளையாட்டு
அரங்கத்தை எம்.பி., சுகவனம் ஆய்வு செய்தார்.ஓசூர் காமராஜ் காலனியில்
நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த
தி.மு.க., ஆட்சியில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன உள்விளையாட்டு
அரங்கம் கட்டும் திட்டம் துவங்கப்பட்டது.நகராட்சி கல்வி நிதியில் இருந்து
13 லட்சம் ரூபாயும், கிருஷ்ணகிரி எம்.பி., சுகவனம் தொகுதி மேம்பாட்டு
நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாயும் பெற்று மொத்தம் 38 லட்சம் ரூபாய்
மதிப்பில் விளையாட்டு அரங்கம் தற்போது கட்டி முடிக்கப்பட்டது.
நேற்று காலை
தி.மு.க., எம்.பி., சுகவனம், கட்டி முடிக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கை
கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். உடன் முன்னாள் நகராட்சி
தலைவர்கள்(பொ) மாதேஸ்வரன், குருசாமி, நகர செயலாளர் விஜயகுமார், பொதுக்குழு
உறுப்பினர் அக்ரோநாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், நகராட்சி
எதிர்கட்சி கட்சி தலைவர் எல்லோ மணி மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் கலந்து
கொண்டனர்.எம்.பி., சுகவனம் நிருபர்களிடம் கூறுகையில், உள் விளையாட்டு
அரங்கம் பணி முழுமையாக முடிந்துள்ளது. இன்னும் ஒரு சில ஃபினிசிங் பணிகள்
உள்ளதாக கான்டிராக்டர் கூறுகிறார். விரைவில் விளையாட்டு வீரர்கள்
பயன்பாட்டிற்கு உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்படும், என்றார்.
