சென்னை:தாழ்த்தப்பட்டோர் நல மாநில ஆணையம் அமைக்க, முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும், என, குடியரசு கட்சி எம்.எல்.ஏ., தமிழரசன் வலியுறுத்தினார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது:
தேசிய அளவில், தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இயங்கி வருகிறது. இதேபோன்ற ஒரு ஆணையத்தை, தமிழக அளவில் அமைப்பதற்கு, முதல்வர் முன்வர வேண்டும். கேரளா, மகாராஷ்டிரா, உ.பி., - ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், மாநில அளவில், இந்த ஆணையங்கள் இயங்கி வருகின்றன.
தர்மபுரி கலவரங்களை, தேசிய ஆணையத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். மாநில அளவில், ஒரு ஆணையம் இருந்தால், உடனடியாக, சம்பவ இடத்திற்குச் சென்று, சேத விவரங்களை ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.
பறை இசையை, பல ஆண்டுகளாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இசைத்து வரு கின்றனர். இத்தொழிலை, பரம்பரை, பரம்பரையாக, ஏராளமானோர் செய்து வருகின்றனர்.
பல்வேறு தொழில்களுக்கு, நல வாரியங்கள் இருக்கின்றன. அதேபோல், பறை இசை கலைஞர்களுக்கு என, தனி நல வாரியத்தை அமைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தமிழரசன் பேசினார்.
தாழ்த்தப்பட்டோர் நல மாநில ஆணையம் தேவை
தினமலர் – பு, 6 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சிக்கினார் பாக்., அம்பயர் : சூதாட்டத்தில் அசாத் ராப் ஈடுபட்டது அம்பலம் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கம்
தினமலர் - 1 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பைனலுக்கு முன்னேறுமா ராஜஸ்தான் : இன்று மும்பையுடன் மோதல்
தினமலர் - 1 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்மற்ற அணிகளுக்கும் தொடர்பா : டில்லி கமிஷனர் அதிர்ச்சி தகவல்
தினமலர் - 1 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்அவமானத்தால் தலைகுனிவு : மத்திய அமைச்சர் வேதனை
தினமலர் - 1 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்மீண்டும் வெட்டோரி
தினமலர் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
