திருவான்மியூர் : வங்கக் கடலில்அதிகாலை திடீரென சீற்றம்
ஏற்பட்டது.சுனாமிக்கு பிறகு கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அடிக்கடி கடல் உள்வாங்குவதும், சீற்றத்துடன் காணப்படுமாக உள்ளது. நேற்று
அதிகாலை கிழக்கு கடற்கரை பகுதியில், கடல் திடீரென சீற்றத்துடன்
காணப்பட்டது. ஆளுயரத்திற்கு அலைகள் பொங்கி எழுந்தன. கடற்கரையில் இருந்து,
100 மீட்டர் தூரம் வரை கடல் நீர் புகுந்தது. இதனால், மீனவர்
குடியிருப்புகளில் பரபரப்பு ஏற்பட்டது. பல மீனவர்கள் கடலுக்குள்
öŒல்லவில்லை. நேற்று அதிகாலை முதல் 10 மணிவரை இந்த சீற்றம் காணப்பட்டது.
மாலையில் சகஜ நிலை திரும்பியது.
