பெரம்பலூர்: தடையில்லாமல் மின்சாரம் வழங்கக்கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தீவட்டி ஏந்தி பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குஜராத் மாநிலத்தில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி
மின்சாரம் வழங்கப்படுவதை போல, தமிழக அரசு மத்திய தொகுப்பிலிருந்து
மின்சாரம் பெற்று, அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி மின்சாரம் வழங்க
வேண்டும், முற்றிலும் தடையின்றி மின்சாரம் வழங்கும் வரை, கிராமங்களில்
பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தடையின்றி
வழங்குவதை உறுதி செய்திடவேண்டும். மின்தடையால் விவசாயிகள், பள்ளி, கல்லூரி
மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையை விளக்கும் வகையில்,
பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெரம்பலூர் காந்தி சிலை
அருகில் தீவட்டி, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாரதிய ஜனதாக்கட்சி தலைவர் சந்திரசேகர்
தலைமை வகித்தார்.
