திண்டுக்கல் :வன உயிரினங்கள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம், திண்டுக்கல் வனவிரிவாக்க மையத்தில் வனத்துறை சார்பில் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி மார்ச் 3, 4 தேதிகளில் நடக்கிறது.
இதில் வன ஊழியர்கள் உட்பட தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.
பயிற்சி முகாமை மாவட்ட வன அதிகாரி தங்கராஜூ துவக்கிவைத்தார். உதவி வனபாதுகாவலர் பரமசிவன், வனச்சரகர்கள் அழகுமலை, சுப்பையா, பத்மநாபன் பயிற்சியளித்தனர். வனப்பகுதிக்குள் குழுக்களாக சென்று வன உயிரினங்களை கணக்கெடுக்கும் முறை விளக்கப்பட்டது.
