சங்கராபுரம்:சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கோவில்அரிமா சங்கம் சார்பில்
ரத்ததான முகாம் நடந்தது.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த
முகாமிற்கு அரிமா சங்க தலைவர் தெய்வீகன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமன்
வரவேற்றார். மண்டல தலைவர் தங்கராஜ், மாவட்ட தலைவர்கள் வேலு, கோவிந்தராஜ்
முன்னிலை வகித்தனர். முகாமில்105 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
