துவரங்குறிச்சியில் ஜெ., பிறந்தநாள் கோலாகலம்சமபந்தி விருந்து

துவரங்குறிச்சி: முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி துவரங்குறிச்சி

அ.தி.மு.க., சார்பில் நடந்த 10 ஆயிரம் பேருக்கான சமபந்தி விருந்தை அமைச்சர்

சிவபதி, எம்.பி., தம்பிதுரை துவக்கி வைத்தனர்.துவரங்குறிச்சியில் முதல்வர்

ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாள் விழாவையொட்டி, பொதுக்கூட்டம், நலத்திட்ட

உதவிகள் வழங்கும் விழா மற்றும் 10 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து ஆகியவை

கோலாகலமாக நடந்தது. மணப்பாறை எம்.எல்.ஏ., சந்திரசேகர் தலைமை வகித்தார்.

மாவட்ட கவுன்சிலர் ராஜ்மோகன், துவரங்குறிச்சி நகர செயலாளர் கனி ஆகியோர்

வரவேற்றனர்.

முன்னதாக மணப்பாறை சமூக வன சரக பகுதியில், வனத்துறை மற்றும்

மாடு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து புங்கன், வேம்பு, நாவல், பூவரசு, ஆவி,

நீர்மருத மற்றும் பல வகையான மரக்கன்றுகள் முதல்வர் ஜெயலலிதாவின் 64வது

பிறந்தநாள் விழாவையொட்டி நடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ்

துவரங்குறிச்சியிலுள்ள எம்.எல்.ஏ., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம் ஆகியவை

முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி, கரூர் எம்.பி., தம்பிதுரை,

மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ., சந்திரசேகர் ஆகியோர் மரக்கன்றுகளை

நட்டனர்.துவரங்குறிச்சி செட்டிகுள கரையிலுள்ள விநாயகர் கோயிலிலிருந்து

நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் ஊர்வலமாக

புறப்பட்டு சென்று, பூதநாயகி அம்மன் கோவில் சென்று சிறப்பு அபிஷேகம்

செய்தனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் சிவபதி, எம்.பி.,

தம்பிதுரை, எம்.எல்.ஏ., சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று, 864 பேருக்கு

சேலையும், 64 பேருக்கு சில்வர் குடமும், 80 பேருக்கு வேஷ்டியும், மூன்று

பேருக்கு தையல் மிஷினும், 10 பேருக்கு அயன்பாக்ஸூம், 43 பேருக்கு கொத்தனார்

சாமான்களும் என, மொத்தம் 1,064 பயனாளிகளுக்கு வழங்கினர்.பூதநாயகி அம்மன்

கோயில் திருமண மண்டபத்தில் நடந்த 10 ஆயிரம் பேர் கலந்துகொண்ட சமபந்தி

விருந்தை, அமைச்சர் சிவபதி, எம்.பி., தம்பிதுரை, எம்.எல்.ஏ., சந்திரசேகர்

ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னச்சாமி,

மருங்காபுரி யூனியன் சேர்மன் பழனியப்பன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ்,

தொகுதி செயலாளர் வக்கீல் முருகன், தொகுதி இணை செயலாளர் பெருமாள், யூனியன்

செயலாளர்கள் மணப்பாறை வெங்கடாசலம், வையம்பட்டி சேது, பொதுக்குழு உறுப்பினர்

முகமது இஸ்மாயில், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் அழகர்சாமி, இளைஞரணி செயலாளர்

கண்ணதாசன், பேரவை செயலாளர் மூக்கையா, மாணவரணி, செயலாளர் சுகுமார், யூனியன்

கவுன்சிலர்கள் மலர்தேவி, கலா, பொன்னுச்சாமி, ராஜேஸ்வரி, மாணிக்கம் உட்பட

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.