கும்மிடிப்பூண்டி : வழித் தகராறில் எதிர் தரப்பிற்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி, ஊராட்சி மன்ற தலைவரின் வீடு புகுந்து, தவறாக போலீசில் புகார் அளிப்போம் என, தெரிவித்ததுடன்
கொலை மிரட்டல் விடுத்த, இரு பெண்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது
செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம், பூவலம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 55. இவரது மனைவி பாப்பம்மாள், 50.
இவர்களது மகன்கள் இளங்கோவன், 35, நாகராஜ், 28, மதன், 25. இவர்களது உறவினர் பெண் ஜமுனா, 38.
மேற்கண்டவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த இவர்களது உறவினர் வஜ்ரவேலு
தரப்பினருக்கும் இடையே, சில தினங்களுக்கு முன் வழித்தகராறு ஏற்பட்டது.
வஜ்ரவேலு தரப்பினருக்கு சாதகமாக, பூவலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர்
லோகம்மாளின் கணவர் கருணாகரன் செயல்பட்டதாக முனுசாமி தரப்பினர் கருதினர்.
இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவரின் வீடு புகுந்த முனுசாமி
தரப்பினர் கருணாகரனை மிரட்டினர்.
மேலும், தவறாக போலீசில் புகார் செய்வதாகவும், மிரட்டல் விடுத்
தனர்.
மேற்கண்டோரின் மிரட்டல் குறித்து, சில தினங்களுக்கு முன் போலீஸ் தரப்பில்
கும்மிடிப்பூண்டியில் நடந்த குறை தீர்க்கும் நாளின்போது, எஸ்.பி.,
ரூபேஷ்குமார் மீணாவிடம் கருணாகரன் புகார் மனு கொடுத்தார்.
எஸ்.பி., உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்ட பாதிரிவேடு போலீசார் முனுசாமி
தரப்பினரின் மிரட்டல்களை உறுதி செய்து, மேற்கண்ட ஆறு பேர் மீது வழக்கு
பதிந்து கைது செய்தனர்.
