விக்ரம் நடிக்க இருக்கும் கரிகாலன் படத்தின் டைரக்டர் கண்ணன் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் ஒப்புக்கொண்ட படம் கரிகாலன். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விக்ரமுடன் ஜரின்கான், அஞ்சலி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகினர். எல்.ஐ.கண்ணன் இப்படத்திற்கான டைரக்ஷ்ன் பொறுப்பை ஏற்று இருந்தார். படம் தொடங்கிய சிறிது காலத்திலேயே படத்தின் தலைப்பும், கதையும் என்னுடையது என்று ராஜசேகரன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படவே விக்ரம் தாண்டவம், டேவிட், ஐ என்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார். இந்நிலையில் படத்திற்கு சிக்கல் எல்லாம் தீர்ந்து துவங்க இருந்த நிலையில், இப்போது டைரக்டரை மாற்றிவிட்டார்களாம். கண்ணனுக்கு பதிலாக ஏற்கனவே படத்திற்கு கதை, வசனம் எழுதி வரும் காந்தி கிருஷ்ணாவே படத்திற்கான டைரக்ஷ்ன் பொறுப்பையும் ஏற்று இருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரமின் கரிகாலன் டைரக்டர் மாற்றம்!
தினமலர் – ஞா, 24 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
திறப்பு விழா
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்வருஷநாடு
8 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்கேரள நாட்டிளம் பெண்களுடனே
6 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்சினி விழா
9 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்ஜெய்ஹிந்த்-2
6 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
தினமலர் - 57 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிவு''
தினமலர் - 1 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!
தினமலர் - 2 மணிநேரம் 1 நிமிடம் முன்அத்வானிக்கு தலைமை பதவி தந்தாலும் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: சரத் யாதவ்
தினமலர் - 4 மணிநேரம் முன்பீகார் அரசின் முடிவுக்கான ஆரம்பம் தொடங்கிவிட்டது: லாலு
தினமலர் - 6 மணிநேரம் முன்

