வீடு திரும்பினார் நெல்சன் மண்டேலா

ஜோகன்னஸ்பர்க்: மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தென்னாப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா வீடு திரும்பினார். மண்டேலாவுக்கு நீண்ட நாளாக இருந்த குடலிறக்கத்திற்காக நேற்று முன்தினம் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். அதிபர் ஜேக்கப் ஜூமா நேற்று விடுத்த அறிக்கையில், மண்டேலா நலம் பெற்று வருவதாக கூறினார். மண்டேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல்கள் வெளியான உடன் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அவர் நலம் பெறுவதற்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அறுவை சிகிச்சைக்குப் பின் மண்டேலா நேற்று வீடு திரும்பினார்.