திருநெல்வேலி:. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ஐ.எஸ்.ஆர்.ஓ.,) கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை தளம்,நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நாகர்கோவிலை அடுத்துள்ள தேரேகால்புதூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் 25, என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராகபணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் தந்தை ஜெயசிங் 52. ஓமன் நாட்டில், அரசு போக்குவரத்து துறையில் மெக்கானிக்காக பணியாற்றிவருகிறார். அண்மையில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். இவர் நேற்று மகேந்திரகிரி ராக்கெட் மையத்தை சுற்றிபார்க்க சென்றிருந்தார். மருமகன் கிருஷ்ணகுமார் அங்கு வேலைபார்ப்பதால், அவரது நண்பரான திரவியம் என்ற காண்ட்ராக்டர் மூலம் அங்கு வேலை செய்வது போல தொழிலாளருக்கு உரிய அடையாள அட்டை பெற்றார். பின்னர் உள்ளே சென்றார். அங்கு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் ஜெயசிங்கை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். அவர் முன்னுக்கு பின்னாக தகவல்களை கூறியதால் அவரை பணகுடி போலீசில் ஒப்படைத்தனர். சுற்றிப்பார்க்க வந்திருந்தாலும் விண்வெளி ஆய்வு மையத்தின் ரகசிய பகுதிக்கு சென்றதால், அங்கு பணியாற்றிய கிருஷ்ணகுமார், அவரது மாமனார் ஜெயசிங், காண்ட்ராக்டர் திரவியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ராக்கெட் மையத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, தவறான அடையாள அட்டை காண்பித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளி மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பேர் கைது
தினமலர் – பு, 16 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: மும்பை அணி 112/1
தினமலர் - 48 நிமிடங்கள் முன்விடுவிக்கப்பட்ட 26 மீனவர்கள் காரைக்கால் வந்தடைந்தனர்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்அச்சுறுத்திய மக்னா யானை ; கும்கி சுற்றி வளைத்து மடக்கியது
தினமலர் - 52 நிமிடங்கள் முன்சிறுமி ஃபோட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ் : "மை ஸ்டாம்ப்' திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்பல ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி பிரச்னை தீருமா? புது குழுவை அமைத்தது மத்திய அரசு
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
