அரியலூர்: கருப்பூர் விநாயகா கல்வியியல் கல்லூரியில் நாளை சர்வதேச அளவிலான
கற்றலின் கட்டமைப்பு அணுகுமுறை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.
இதுகுறித்து விநாயகா கல்வியியல் கல்லூரி முதல்வர் சுந்தரமூர்த்தி வெளியிட்ட
அறிக்கை:அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே செயல்படும் கருப்பூர்
விநாயகா கல்வியியல் கல்லூரியில், கற்றலின் கட்டமைப்பு அணுகுமுறை என்ற
தலைப்பில், சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நாளை (27ம் தேதி) நடக்கிறது.
காலை 10 மணிக்கு கல்லூரியில் நடக்கவுள்ள கருத்தரங்கு துவக்க விழாவுக்கு,
விநாயகா கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாஸ்கர் தலைமை வகிக்கிறார்.
கல்வியியல் கல்லூரி முதல்வர் சுந்தரமூர்த்தி வரவேற்று
பேசுகிறார்.சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலை இணை பேராசிரியர்
சீதாலெட்சுமி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகிறார். சென்னை எஸ்.ஆர்.எம்.
பல்கலைகழக இயக்குனர் வினைதீர்த்தான், புதுச்சேரி மத்திய பல்கலை இணை
பேராசிரியர் மும்தாஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசுகின்றனர்.பல்வேறு நாடுகள்,
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பல்கலைகளிலிருந்தும்,
கருத்தரங்குக்கு வரும் ஆராய்ச்சியாளர்கள் பலரும் தங்களது
ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து பேச இருக்கிறார்கள். கருத்தரங்குக்கான
ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்து வருகிறது.
