வானூர்:முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு வானூர் ஒன்றிய அ.தி. மு.க.,
சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி
மற்றும் லட்டு வழங்கி கொண்டாடினர்.வானூர் ஒன்றிய செயலர் முன்னாள்
எம்.எல்.ஏ., கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளா ளர் கண்ணன் முன்னிலை
வகித்தார். ஒன்றிய துணை செயலர் ராஜகோபால் வரவேற்றார். ஜானகிராமன்
எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிவா உட்பட பலர் பால்குடம் எடுத்தனர்.
காலை 11.30 மணிக்கு இரும்பை பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து
மகாளீஸ்வரர் சிவன் கோவிலுக்கு 64 பால்குடம் ஊர்வலமாக எடுத்து சென்று
அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு
புத்தகம் வழங்கினர்.பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் இலவழுதி, ஊராட்சி
சங்க தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், ஊராட்சி தலைவர் ரங்கநாதன்,
ஜெ., பேரவை செயலர் பழனி, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர்
குள்ளபாபு, மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சக்ரபாணி, ஊராட்சி தலைவர்
பாஸ்கர், மாணவரணி செயலர் சிவக்குமார், தொண்டரணி செயலர் அய்யப்பன், ஓட்டுநர்
அணி வேலிநாதன் கலந்து கொண்டனர்.
