புதுடில்லி: சி.பி.ஐ., மற்றும் சி.வி.சி., ஆகியவை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக கூறிய, மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைமை அதிகாரி வினோத் ராய்க்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரியானா மாநிலம் குர்கானில் உலக பொருளாதார அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய வினோத் ராய், மத்திய அரசு முடிவெடுப்பதில் தைரியமில்லாமல் செயல்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும், சி.பி.ஐ., மற்றும் சி.வி.சி., ஆகியவை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி, அரசு துணிவில்லாமல் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள வினோத் ராய், 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை நடந்த மத்திய அரசிலும் பொறுப்பில் இருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டு அந்த கால கட்டத்திற்கும் பொருந்துமானால், துணிவில்லாமல் நடந்து கொண்டதான குற்றச்சாட்டு அவருக்கும் பொருந்தும் என கூறியுள்ளார். மேலும், இதுகுறித்த கருத்து தெரிவித்த திக்விஜய் சிங், வினோத் ராயின் மேலான கருத்துக்கு நன்றி என கிண்டலடித்துள்ளார்.
வினோத் ராய் மீது காங்கிரஸ் காட்டம்
தினமலர் – வி, 8 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 37 நிமிடங்கள் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 53 நிமிடங்கள் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...?
தினமலர் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்அணியையும், பதவியையும் காப்பாற்ற மருமகன் பலிகடா
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
